தற்போது முன்னணி நடிகராக சினிமாத் துறையிலும் மக்கள் மனதிலும் வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதன் முதலில் ஒரு காமெடியனாக அறிமுகம் ஆகி அதிலிருந்து கொஞ்சம் மேலா ஆங்கரிங் செய்து அதன் பிறகு சில பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தொடங்கியதில் இருந்து மேலும் ஒரு படி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை என்று தான் சொல்லவேண்டும் இவரை நடிகராக அதுவும் ஹீரோவாக ஏத்துக்
கொள்ள யாருமே முன் வரவில்லை. இருந்தாலும் சிவகார்த்திகேயன் தனது முயற்சியை கை விடாமல்
மேலும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அவர் நினைத்ததுபோல இவர் படம் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்து அதில் இருந்து தற்போது வரை இவர் நடிக்கும் படம் சூடு பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றே சொல்லலாம் ஏனென்றால் இவருக்கு எவ்வளவு நெகட்டிவான பேச்சுக்கள் வந்ததோ.
தற்பொழுது அதவிட பலமடங்கு பாசிட்டிவான பேச்சுக்கள் வருகின்றது இவருக்கென தற்பொழுது தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கியிருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் நடித்த டாக்டர் படம் இவருக்கு நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது இந்த படத்தினை தொடர்ந்து இவர் மேலும் பல படங்களில் கமிட்டாகி வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து சினிமா இண்டஸ்ட்ரியல் சிவகார்த்திகேயனை வாழ்த்தி மேல் தூக்கி விட்டதை தனுஷ் தான் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தனுஷ் நடித்த மூன்று திரைப்படத்திலும் மற்றும் எதிர்நீச்சல் படத்திலும் இணைந்து நடித்ததால் இவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் இதனை தொடர்ந்து இவர்களுடன் அனிருத்தும் சேர்ந்து கொண்டார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மூன்று பேரும் ஒன்றாக தான் செல்வார்களாம்.
மேலும் சமீபத்தில் திருச்சிராப்பழம் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் திடீரென்று இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் ஒரு நாள் உங்களது அசிஸ்டன்ட் யாராவது காமெடி கதை வைத்துள்ளாரா என்று கேட்டார். அதுக்கு நான் உங்களுக்கு காமெடி கதை என்றால் மிகவும் பிடிக்குமா என்று கேட்டார் . தனுஷ் அதுக்கு அந்த கதை சிவகார்த்திகேயன் எனக்கு தேவை என்று கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் திறமைசாலி சூப்பர் ஸ்டார் ஆக வருவதற்கு அனைத்து திறமைகளும் அவரிடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்பொழுது இந்த விஷயம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பரவலாக வருகிறது. பல ரசிகர்கள் வாழ்த்துக்களும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.