பல வருஷமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர் தான் விஜய். தளபதி விஜய் அவர்களுக்கெனவே பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய் அப்பொழுது இருந்து தற்பொழுது வரை பல ஹீரோயின்கள் கூட நடித்திருக்கின்றார் இதில் பல நடிகைகளுடன் குத்தாட்டம் கூட போட்டு இருக்கின்றார்.
இதில் முக்கியமாக விஜய் குத்தாட்டம் என்றாலே விஜய் மற்றும் சிம்ரனை தான் சொல்வார்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய பாடல் மிக ஹிட்டாக ஆனது இதனை தொடர்ந்து விஜயுடன் நடனமாடிய நடிகைகளின் ஒருவர் தான் மாளவிகா.
ஒரு தடவையாவது தல அஜித் கூட நடிக்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தன்னுடைய அறிமுகப் படத்திலேயே தல அஜித் கூட ஜோடியாக சேர்ந்து நடித்தவர்தான் மாளவிகா. மாளவிகா 1997இல் பிறந்தார் இவரது சொந்த ஊர் பெங்களூர்.
மாளவிகா சின்ன வயசுல இருந்தே மாடலிங்ல இருக்கிறார். இவர் மாடலிங் க்குப் பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவரது முதல் படமே தமிழில் எடுக்கப்பட்ட உன்னைத்தேடி படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஜோடியாக நடித்திருப்பார். இந்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து பல படங்கள் தமிழில் நடித்து வந்தார்.
வெற்றிக்கொடிகட்டு படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்தில் வரும் கருப்புதான் எனக்கு பிடித்த கலர் பாட்டின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் பாட்டுல இவர் ஆடின குத்தாட்டம் தான் இன்னைக்கு வரைக்கும் இவரை அடையாளம் படுத்துகிறது.
இதனை தொடர்ந்து விஜய் நடித்த குருவி படத்தில் சில காட்சிகளில் மாளவிக்க வந்திருப்பார். என்னதான் ஆடி இருந்தாலும் குத்தாட்டம் போடவில்லை என்ற ஏக்கத்துடன் இருப்பதாக ஏனென்றால் அப்பொழுது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்திருப்பார். அதனால குத்தாட்ட மாதிரியே இருக்க மாட்ட என்ன தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மாளவிகா விஜய்யுடன் குத்தாட்டம் போட வேண்டும் என்று ஆசை என்று கூறியிருக்கிறார்.