45 வயதிலும் 2k kids போலிருக்கும் மாளவிகா…! ஆஹா இது நம்ம மாளவிகா வா….! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Cinema Entertainment

ஒரு தடவையாவது தல அஜித் கூட நடிக்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தன்னுடைய அறிமுகப் படத்திலேயே தல அஜித் கூட ஜோடியாக சேர்ந்து நடித்தவர்தான் மாளவிகா. மாளவிகா 1997இல் பிறந்தார் இவரது சொந்த ஊர் பெங்களூர்.

மாளவிகா சின்ன வயசுல இருந்தே மாடலிங்ல இருக்கிறார். இவர் மாடலிங் க்குப் பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவரது முதல் படமே தமிழில் எடுக்கப்பட்ட உன்னைத்தேடி படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஜோடியாக நடித்திருப்பார். இந்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து பல படங்கள் தமிழில் நடித்து வந்தார்.

வெற்றிக்கொடிகட்டு படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்தில் வரும் கருப்புதான் எனக்கு பிடித்த கலர் பாட்டின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் பாட்டுல இவர் ஆடின குத்தாட்டம் தான் இன்னைக்கு வரைக்கும் இவரை அடையாளம் படுத்துகிறது.

மாளவிகா தமிழ் படம் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு , மொழிகளில் நடித்திருக்கிறார். மாளவிகா 2007 இல் சுமேஷ் என்ற பிசினஸ் மேனை திருமணம் செய்து கொண்டார் இதன் பிறகு இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மாளவிகா குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். இவர் ஒரு பேட்டியில் நீங்கள் இப்பொழுது நடிப்பீர்களா என்று கேட்டதற்கு நான் நடிக்க மாட்டேன் குடும்பத்தை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தற்பொழுது மாளவிகா இணையதளத்தில் பலவிதமான மாடல் ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.