தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள் அந்த வரிசையில் தற்பொழுது பிரபல இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலவந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் உலகநாயகன் நடித்த விக்ரம் படம் வெளியானது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கமல் ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகிறார்கள் இந்த படம் திரையில் வெளியானதில் இருந்து தற்போது வரை அமோகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்திருக்கின்றது.
இந்த படத்தில் அனைவருக்கும் ஒரு பிடித்த காட்சி மற்றும் கவனத்தை ஈர்த்த காட்சி ஜென்ட் டீனா கேரக்டர் தான். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இவர் நான் சினிமா துறைக்கு வந்த முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நான் கலா மாஸ்டர் ,
பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் துணை நடன இயக்குனராக பணியாற்றி இருக்கின்றேன் இதனை தொடர்ந்து தினேஷ் மாஸ்டர் இடமும் துணை இயக்குனர் ஆக 20 ஆண்டு பணியாற்றியிருக்கின்றேன்.
விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் திரை உலகிற்கு அறிமுகமாக இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் நான் சூர்யா அஜித் விஜய் ஒரு நடிகர்களுடன் குரூப் டான்ஸ் ஆடி இருக்கின்றேன். சூர்யா மற்றும் அஜித் சேர்ந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தில் குரூப் டான்ஸ் ஆடி இருக்கின்றேன். என்று கூறினார் இது மட்டுமல்லாமல் மேலும் பல சுவாரசியமான விஷயங்களை கூறியிருந்தார் இதனை தொடர்ந்து இவர் கூறிய அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் குரூப் டான்ஸ் ஆடின புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.