ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாணவியின் நல்லடக்கம்…!!

News

தமிழ் நாட்டையே உலுக்கிய சம்பவம் என்றால் அது கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான்.தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது இதுதான் அனைத்து மக்களாலும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.

தமிழக அரசு தலைமையில் தற்பொழுது அந்த மாணவியின் உடலை நல்லடக்கம் நடைபெற்று வருகிறது.ஒரு அரசியல் தலைவர்கள் இறுதி அடக்கம் போல அவ்வளவு மக்கள் கூட்டம் சூல அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக காவல் துறையினர் கன்கானித்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு அந்த மாணவியின் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

ஆம் தற்பொழுது அந்த வேப்பூர் பகுதியில் அந்த பெண்ணின் சொந்த ஊரான அந்த இடத்தில் நல்லடக்கம் நடைபெற போகும் என்பதால் அவ்வளவு மக்கள் குவிந்து இருக்கிறார்கள் ஊர் மக்களும் சரி வெளியூரிலிருந்து வந்த மக்களும் சரி அந்தப் பெண்ணின் நல்லடக்கத்தை காண அவ்வளவு மன வருத்தத்தோடு வந்திருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் ஊர் மக்கள் அனைவரும் அந்த பெண்ணிற்காக கண்ணீர் சிந்தி வருகிறார்கள்.

எந்த ஒரு மாணவிக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது தற்பொழுது நடந்த இந்த சம்பவம் நடைபெற்று விட்டது மேலும் யாருக்கும் நடைபெறாமல் இருப்பதற்காகவும் அனைத்து மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தித்து வருகிறார்கள் இந்த மாணவியின் ஆன்மா சாந்தியடையவும் அனைவரும் பிரார்த்திக்கிறார்கள் இப்படி இருக்க எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

நேற்று நீதிபதி வினோத் அவர்கள் கூறியது போல இன்று நல்ல முறையில் நடைபெற்று வருகிறது குழந்தை இறந்து விட்டது அதனுடைய இறுதி நல்லடக்கம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் இதனை வைத்து நிறைய பேர் ஆதாயம் தேடுகிறார்கள் அது வேண்டாம் இது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பது அவர் கூறியது போல இன்று நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

அந்த மாணவியின் பெற்றோர்கள் தண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள் அவர்களுக்கு தான் தெரியும் அவர்களது குழந்தையின் இறப்பு எவ்வளவு பாதிக்கும் என்று பொதுமக்களாக இருக்கும் நம்மளுக்கு இவ்வளவு வருத்தம் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆறுதல் கூறினாலும் அது முடியாது தற்பொழுது அந்த இறுதி நல்லடக்கம் சொந்த ஊரில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பல அரசியல் தலைவர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *