கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் இந்த நடிகையா..! அடஇவர் பல சாமி படங்களை நடித்து நடிகை ஆச்சே.!

கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் இந்த நடிகையா..! அடஇவர் பல சாமி படங்களை நடித்து நடிகை ஆச்சே.!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து தற்போது ரசிகர்களால் எடுக்கப்பட்டு சீசன் 5 வரைக்கும் ஓடிக்கொண்டு இருக்கிறது மேலும் இதற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள் மேலும் பலர் இதற்கு அடிமையாகவே இருக்கிறார்கள் இதை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார்கள் தற்போது அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட காரணத்தினால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை அவரால் தொகுத்த வழங்க முடியாத நிலையில் அதை யார் தொகுத்து வழங்குவார் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது தற்போது அதை தொகுத்து வழங்க ஒரு பிரபல நடிகை ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன்
மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெரிதும் பேசப்பட்டு புகழப்பட்ட ஒரு நடிகை ஆவார் இவர் மக்களிடையே நீங்க இடங்களை பிடித்து இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.
1986-ஆம் ஆண்டிலேயே அம்மன் வேடமிட்ட ரம்யா, 1995-ஆம் ஆண்டு வெளியான அம்மன் படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து அவரைத் தேடி அம்மன் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

30 ஆண்டுகளாக திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெற்றிப் பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த ஐந்து படவுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பைப் பெற்றிருக்கின்றார்.

தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், மோகன், சுரேஷ், தெலுங்கில் N.T. ராமாராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணூவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, ஹிந்தியில் அமிதாப் பச்சன், வினோட் குமார், ஷாருக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா என முன்னணி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்றார்.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெரிதும் புகழ்பெற்ற ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் மிகப்பெரிய வசூலை பெற்ற இவர் தற்போது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் இவரை நடிக்க வந்த பலர் சில தொலைக்காட்சிகளில் நடுவராகவும் பார்த்து வந்தோம் தற்போது பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடுவராக இருக்கிறார் என்பதையும் இவர் எப்படி செய்கிறார் என்று பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *